மும்பை : பட்ஜெட் அறிவிப்புகள் சூரியனுடைய தேரின் ஏழாவது குதிரையாக உள்ளது. ஏழாவது குதிரை கனவு, அபிலாஷை மற்றும் எதிர்காலத்தை குறிப்பதாகும். சூரியனின் ஆறு குதிரைகள் களைப்படைந்தாலும்; காயமடைந்தாலும், ஏழாவது குதிரை; சூரியனின் தேரை, அதன் இலக்கை அடையச் செய்துவிடும்.அதேபோல, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 7 சதவீதமாக உயர்த்துவதற்கு உதவும் வகையில், பட்ஜெட்டில், மூலதன செலவுகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு உள்ளதாக, ரிசர்வ் வங்கியின் பொருளாதார அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:பட்ஜெட்டில், அடுத்த நிதியாண்டுக்கான மூலதன செலவுகளுக்காக, 10 லட்சம் கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதமாகும்.
மேலும் பட்ஜெட்டில் வரி, மூலதன செலவுகள், நிதி ஒருங்கிணைப்பு திட்டங்கள் ஆகியவை குறித்த அறிவிப்புகள், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 7 சதவீதமாக உயர்த்த உதவும்.மூலதன செலவுகளுக்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டு இருப்பது தனியார் முதலீடுகளை அதிகரிக்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், தேவைகளை அதிகரிக்கவும்
உதவுவதாக இருக்கும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement