ஒரு இளைஞர் மது அருந்திவிட்டு பைக்கில் வந்த போது காவல்துறையினர் அவருடைய வாகனத்தை பறிமுதல் செய்த காரணத்தால், அந்த நபர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நிஷாந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திமுகவின் இளைஞர் அணி தலைமை செயலகத்தில் டேட்டா என்ட்ரி வேலை செய்து வந்துள்ளார். சம்பவ தினத்தன்று நிஷாந்த் மது அருந்திவிட்டு நண்பர்களுடன் தனது இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரை மரித்து வாகனத்தை பறிமுதல் செய்து அபராதம் விதித்தார்கள். இதன் காரணமாக, நிஷாந்த் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக கூறப்படுகிறது.
இத்தகைய நிலையில், திடீரென்று தனது வீட்டில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து இருக்கிறார். இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.