ரஷ்யாவை சின்னாபின்னமாக்கும் திட்டம்… பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் வெளிப்படை


உக்ரைன் மண்ணில் ரஷ்யா தோல்வியடைய வேண்டும் எனவும், ஆனால் ரஷ்யாவை சின்னாபின்னமாக்கும் வெற்றி வேண்டாம் எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் பலவீனமான கண்ணி

ஜனாதி மேக்ரானின் இந்த கருத்துக்கு சில நேட்டோ உறுப்பு நாடுகள் கடும் விமர்சனம் வைத்துள்ளதுடன்,
உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் தொடர்பில் கலவையான ஒரு கருத்தை வெளியிட்டு, நம்பிக்கையை பலவீனமடைய செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ரஷ்யாவை சின்னாபின்னமாக்கும் திட்டம்... பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் வெளிப்படை | Emmanuel Macron Wants Defeat Russia

@epa

மட்டுமின்றி, மேற்கத்திய நாடுகளின் கூட்டணியில் பிரான்ஸ் ஒரு பலவீனமான கண்ணி எனவும் விமர்சித்துள்ளனர்.
பிரஞ்சு ஊடகம் ஒன்றில் ஜனாதிபதி மேக்ரான் அளித்துள்ள பேட்டி சனிக்கிழமை வெளியானதில், உக்ரைனில் ரஷ்யா தோற்கடிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன், உக்ரைன் தனது நிலையைப் பாதுகாக்கவும் வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என மேக்ரான் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ரஷ்யாவை மொத்தமாக சின்னா பின்னமாக்கிவிட்டு வெற்றி கொள்ளும் திட்டத்திற்கு பிரான்ஸ் ஆதரவளிக்காது எனவும் மேக்ரான் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவை அதன் மண்ணில் வெற்றிகொள்ள வேண்டும் என சில நாடுகள் குறிப்பிடுவதை தாம் ஏற்கவில்லை எனவும் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவை சின்னாபின்னமாக்கும் திட்டம்... பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் வெளிப்படை | Emmanuel Macron Wants Defeat Russia

@ap

ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தை

உக்ரைன் ஆதரவு நாடுகள் ராணுவ உதவிகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என வெள்ளிக்கிழமை கோரிக்கை முன்வைத்த மேக்ரான்,
ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைகளுக்கு இது சரியான தருணம் அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை அளிப்பதை நாம் இன்னும் அதிகரிக்க வேண்டும் எனவும், மக்களையும் அந்த நாட்டின் ராணுவத்தையும் பாதுகாக்க அது உதவும் என்றார்.

ரஷ்யாவை சின்னாபின்னமாக்கும் திட்டம்... பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் வெளிப்படை | Emmanuel Macron Wants Defeat Russia

@getty

முனிச்சில் முன்னெடுக்கப்பட்ட மூன்று நாட்கள் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்ட பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோரும் உக்ரைனுக்கு ஆதரவாக தங்கள் நிலைப்பாட்டை குறிப்பிட்டுள்ளனர்.

மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் பல உக்ரைனுக்கு மேலும் அதிகமாக ஆயுதங்களை வழங்க உறுதி செய்ததுடன், ரஷ்யாவுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை கொண்டுவரவும் கோரிக்கை வைத்தனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.