குல்மர்க்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தனிப்பட்ட பயணமாக கடந்த வாரம் ஜம்மு காஷ்மீர் சென்றார். இந்நிலையில், ஸ்ரீநகர் அருகே காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “ஜம்மு காஷ்மீர் மக்களின் விருப்பத்துக்கு விரோதமாக 370 பிரிவை நீக்கி, ஜம்முவை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பாஜ பிரித்து விட்டது.
இந்த தவறான நடவடிக்கை மூலம் ஜம்மு மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. ஜம்மு மக்களின் உரிமைகளுக்காக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும். காங்கிரஸ் கட்சியின் மக்கள் சார்ந்த கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு ஏராளமான இளையதலைமுறையினர் காங்கிரசில் இணைகின்றனர். மக்களின் நல்வாழ்வுக்காக உழைக்க அவர்களை ஊக்குவிக்க வேண்டும்” என்று கூறினார்.