
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததற்காக மூத்த நடிகர் காத்தாடி ராமமூர்த்திக்கு சம்பள பாக்கி கொடுக்கப்படவில்லை என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.
காத்தாடி ராமமூர்த்தி பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததாகவும், ஆனால் நேரமின்மை காரணமாக அது நீக்கப்பட்டதாகவும், அவர் நடித்ததற்கு கூலி கூட வரவில்லை என்றும் பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அதில், மணிரத்னம் அவர்கள் வரைக்குமோ, லைகாவின் பெரிய அதிகாரிகள் வரைக்குமோ இந்த மாதிரி விஷயங்கள் போவதில்லை. ஒருவேளை இந்தப் பதிவின் மூலம் ஒரு நல்ல கலைஞனின் உழைப்புக்கான மரியாதை கிடைத்தால் நல்லது என்கிற நோக்கத்தில் பகிர்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

அவரது பதிவின் எதிரொலியாக காத்தாடி ராமமூர்த்திக்கு லைகா நிறுவனம் கொடுக்க வேண்டிய தொகையை கொடுத்துள்ளதாக மீண்டும் பட்டுக்கோட்டை பிரபாகர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில் குடந்தை ஜோதிடர் வேடத்தில் காத்தாடி ராமமூர்த்தி நடித்தார்.
நீளம் கருதி அவருடைய காட்சிகளும் நீக்கப்பட்டன. அதை வருத்தத்துடன் பகிர்ந்ததுடன் தன் உழைப்புக்கான ஊதியமும் கிடைக்கவில்லை என்பதையும் தெரிவித்தார். அதை ஒரு பதிவாக்கினேன்.

பின்னர் காத்தாடி சாரை உரத்த சிந்தனையின் விழாவில் சந்தித்தபோது முக மலர்ச்சியுடன் தொகை வந்தது என்று நன்றி சொன்னார். கவனத்திற்கு வந்ததும் நடவடிக்கை எடுத்த லைகா நிறுவனத்திற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
newstm.in