அனார்கலியாக நடிக்கும் அதிதி ராவ்

பாலிவுட் நடிகை அதிதி ராவ். தமிழில் சிருங்காரம், காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், சைக்கோ, ஹே சினாமிகா படங்களில் நடித்தார். தற்போது அவர் 'தாஜ் : டிவைடட் பை பிளட்' என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.

இது முகலாய சக்ரவர்த்தி அக்பரின் வரலாற்று கதை. அக்பர் ஆட்சி காலத்தில் நடந்த வாரிசு போர் பற்றிய தொடர். இதில் அக்பராக நசுருதீன் ஷா நடிக்கிறர். அக்பரின் மகன் சலீமாக ஆஷிம் குலாட்டியும், அவரது காதலி அனார்கலியாக அதிதிராவும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர தாஹா ஷா பாதுஷா, சுபம் குமார் மெஹ்ரா ஆகிய முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரான் ஸ்கால்பெல்லோ இயக்கி உள்ளார்.

அனார்கலியாக நடிப்பது குறித்து அதிதி ராவ் கூறியதாவது: நான் எப்போதும் வரலாற்றை விரும்பி ரசித்திருக்கிறேன்; நமது பாடப்புத்தகங்களுக்கு வெளியே பல மிகச்சிறந்த கதைகள் எப்பொழுதும் இருந்துள்ளன. அனார்கலி பாத்திரத்தை ஏற்க என்னிடம் சொன்னபோது நான் எவ்வளவு உற்சாகமாக உணர்ந்தேனோ அதே அளவு பயமாகவும் உணர்ந்தேன். அனார்கலி என்ற கதாபாத்திரம் ஒரு வரலாற்றுச் சின்னம், அவளுடைய அழகும் கருணையும் இணையற்றதாக ஒருவரின் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒன்றாகக் கருதப்படுகிறது. குறிப்பாக 'முகல்- ஏ- ஆசம்' படத்தில் மயக்கும் மதுபாலாவால் அந்தப் பாத்திரம் எவ்வாறு உயிர்பெற்றெழுந்தது என்பது குறித்து நான் முதலில் மிரட்சியடைந்தேன்.

அனார்கலி கதாபாத்திரம் மிகவும் தனித்துவமான முறையில் எழுதப்பட்டிருந்த காரணத்தால் அதை ஏற்றுக்கொள்வது என்பது ஒரு புதிய ஒரு சவாலாகத் தோன்றியது. அனார்கலியாக நடிப்பது எனக்குக் கிடைத்த ஒரு பாக்கியம் மற்றும் பொறுப்பு. அதற்கு நான் முழுமையாக நியாயம் செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன். என்கிறார் அதிதி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.