ஓஸ்லோ: இந்தாண்டு (2023) அமைதிக்கான நோபல் பரிசுக்கு 305 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச அளவில் அறிவியல், கலை, இலக்கியம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு 305 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக நோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு அதிகபட்சமாக 376 பெயர்கள் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டன.
இந்நிலையில் இந்தாண்டு 305 பெயர்கள் பரிந்துரை பட்டியலில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, துருக்கி அதிபர் ரீசெப் தைப்பி எர்டோகன், நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் , புடின் எதிர்ப்பாளர் அலெக்ஸி நாவல்னி, உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement