புதுடில்லி,கிழக்கு லடாக் எல்லையில், மீதமுள்ள பகுதிகளில் இருந்து படைகளை திரும்ப பெறுவது குறித்து, இந்திய – சீன துாதரக அதிகாரிகள் மட்டத்தில் நேற்று விவாதிக்கப்பட்டது.
இந்திய – சீன எல்லை விவகாரத்தில் ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான அமைப்பு, 2012ல் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு அவ்வப்போது கூடி, எல்லை விவகாரம் குறித்து பேச்சு நடத்தி வருகிறது.
இதன் 26வது கூட்டம், சீன தலைநகர் பீஜிங்கில் நேற்று நடந்தது.இரு நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். அப்போது, கிழக்கு லடாக் பகுதியில் மீதமுள்ள இடங்களில் குவிக்கப்பட்டுள்ள படைகளை திரும்ப பெறுவது குறித்து இருதரப்பும் விவாதித்தன. ஆனால், இது தொடர்பான தீர்க்கமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை.மேலும், ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான, 18வது சுற்று பேச்சை விரைவில் கூட்டவும் அப்போது முடிவெடுக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement