பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் பகுதியில் பெரியம்மாபாளையம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஒரு அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் இந்த பள்ளியில் பணிபுரிந்த ஒரு ஆசிரியர் அங்கே படித்த சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இத்தகைய நிலையில், கடந்த ஒரு மாதமாக அந்த ஆசிரியர் மீண்டும் சிறுமைகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த விஷயம் சிறுமிகளின் பெற்றோருக்கு தெரிய வர அவர்கள் பெரியம்மா பாளையம் அரசு பள்ளிக்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் பள்ளியில் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் சிறுமிகளிடம் தனிப்பட்ட முறையில் விசாரித்து வருகின்றனர்.