அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது. அதில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனி நீதிபதி உத்தரவு ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாகவும், இரு நீதிபதிகள் அமர்வு எதிராகவும் அமைந்தது.
அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தார். பல்வேறு கட்டங்களாக அதன் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தீர்ப்பு வழங்குகிறார்.
எட்டு மாதங்களுக்கும் மேலாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும் நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூடிய அதே சமயத்தில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அப்போது
எடப்பாடி பழனிசாமி
ஆதரவாளர்களுக்கும், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதன் பின்னர் போலீஸார் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ததுடன் அதிமுக அலுவலகத்துக்கும் சீல் வைக்கப்பட்டது.
தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரும் என்று எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக அலுவலகம் முன்பு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.