இந்நேரம் இருந்திருக்க மாட்டோம், நூலிழையில் உயிர் தப்பினோம்! கடவுளுக்கு நன்றி..நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா பகிர்ந்த அதிர்ச்சி வீடியோ


படப்பிடிப்பு தளத்தில் நடந்த எதிர்பாராத விபத்தில் உயிர் தப்பியதாக நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா பதிவிட்டுள்ளனர்.


படப்பிடிப்பு தளம்

‘மார்க் ஆண்டனி’ என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு ஏராளமான கலைஞர்கள் பங்கேற்ற சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது.

அதில் வாகனம் ஒன்று சுவரை இடித்துக் கொண்டு வரும்படி காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த வாகனம் கூட்டத்திற்குள் புகுந்து கூட்டத்தை நோக்கி வேகமாக வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் அலறியடித்து ஓடினர்.

குறித்த வாகனம் உள்ளே அமைக்கப்பட்டு இருந்த செட்டின் மீது மோதி நின்றது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா பதிவு

இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

‘சில நொடிகள் மற்றும் சில அங்குலங்களில் என் வாழ்க்கையைத் தவறவிட்டிருப்பேன், எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி. மீண்டும் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளேன்’ என விபத்து வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அதேபோல் நடிகர் எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டுள்ள பதிவில், ‘உண்மையிலேயே இறைவனுக்கு நன்றி. நூலிழையில் உயிர் தப்பினோம்…தற்செயலாக, லொறி நேராக வருவதற்கு பதிலாக, கொஞ்சம் குறுக்காக சென்று விபத்து ஏற்பட்டது.

அது நேராக வந்திருந்தால் நாங்கள் இருவரும் இப்போது ட்வீட் செய்திருக்க மாட்டோம், கடவுளுக்கு நன்றி. நாங்கள் அனைவரும் தப்பித்து விட்டோம்’ என கூறியுள்ளார்.    

விஷால்/Vishal

எஸ்.ஜே.சூர்யா/S.J.Suryah



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.