இந்துத்துவ அமைப்புகளை தடை செய்ய வேண்டும்; இஸ்லாமிய தலைவர் கோரிக்கை.!

கடந்த பிப்ரவரி 16ம் தேதி ஹரியானா மாநிலம் பிவானியில் ஜுனைத் மற்றும் நசீர் உள்ளிட்ட இரு முஸ்லீம்களின் உடல்கள் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன . பலியான இருவரும் பசு காவலர்களால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. அவர்களது குடும்பத்தினர், இந்துத்துவ பஜ்ரங் தளத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஐந்து பேரின் பெயரை, போலீசில் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பஜ்ரங்க் தள் அமைப்பைச் சேர்ந்த மோனு மானேஷரின் பெயர் எஃப்ஐஆர் இருந்து நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது. ஏனெனில் இந்துத்துவாதியான மோனு மானேஷர் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் முஸ்லீம்களை தாக்கும் வீடியோக்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.

அதேபோல் கொலையாளிகளுக்கு ஆதரவாக மாநிலத்தில் பெரும் கூட்டங்கள், போராட்டங்கள் மற்றும் மகா பஞ்சாயத்துகள் நடத்தப்பட்டு, கொலையாளிகளை கைது செய்தால் போலீசாரை சுட்டு தள்ளுவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வலதுசாரி இந்துத்துவ அமைப்புகளான பஜ்ரங்தள் மற்றும் விஸ்வ ஹிந்து பரிசத் ஆகிய அமைப்புகள் தீவிரவாத அமைப்புகள் என அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ ஏற்கனவே கூறியுள்ளது குறிப்பிடதக்கது.

இந்தநிலையில் மேற்கூறிய இரண்டு அமைப்புகளையும் தீவிரவாத அமைப்புகள் என அறிவித்து தடை செய்ய வேண்டும் என இஸ்லாமிய அமைப்பின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். இத்திஹாத்-இ-மில்லத் கவுன்சில் தலைவர் மௌலானா தௌக்கீர் ரசா கான், ஹரியானா மாநிலம் பிவானியில் இரண்டு முஸ்லீம் ஆண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து பேசுகையில், ‘‘விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) மற்றும் பஜ்ரங் தள் போன்ற வலதுசாரி அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) போன்று தடை செய்ய வேண்டும்.

பிவானி சம்பவம் பிப்ரவரி 16 அன்று நடந்தது, ஆனால் நாங்கள் அமைதியாக இருக்கிறோம். எங்கள் குழந்தைகளான ஜுனைத் மற்றும் நசீர் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவர்கள் கொல்லப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக கூட்டங்கள் மற்றும் மகாபஞ்சாயத்துகள் நடத்தப்பட்டபோது, நாங்கள் கொலைகள் மற்றும் கும்பல் படுகொலைகளை உணர்ந்தோம். இத்தகைய சம்பவங்கள் இந்தியாவில் தற்போது சாதாராணமாகிவிட்டன.

கர்நாடக தேர்தல் 2023 கருத்துக்கணிப்பு: ஆட்சியை இழக்கிறதா பாஜக? காங்கிரஸ் விஸ்வரூபம்!

பிஎஃப்ஐ தடை செய்யப்பட்ட விதத்தில், விஎச்பி மற்றும் பஜ்ரங்தளம் ஆகியவை பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட வேண்டும். பிவானியில் நடந்தது இந்து சமூகத்திற்கும் தவறான செய்தியை அனுப்புகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், தாங்களும் ஹீரோக்கள் என்று முத்திரை குத்தப்படுவார்கள் என்று அவர்கள் நினைக்கலாம். நிர்வாகம் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும், இல்லையெனில் வரும் நாட்களில் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்’’ என அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.