சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமபுரம் பகுதியில் தனியார் கார் சர்வீஸ் செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இங்கே பணிபுரியும் பெண் ஊழியர்கள் கழிவறைக்கு சென்ற போது அங்கே மர்மநபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து நிறுவன மேலாளரிடம் தெரிவித்ததை அடுத்து அங்கு சென்று பார்த்த போது மர்ம நபர் ஒருவர் கழிவறையில் இருந்து தப்பி ஓடியுள்ளார். அதன் பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மடக்கி பிடித்தனர். அதில் பூந்தமல்லி மேல் மாநகரை சேர்ந்த தமிழரசன் என்கிற ஆகாஷ் (வயது 23) என தெரியவந்தது.
அதன் பின்னர் அவரின் செல்போனை வாங்கி பரிசோதனை செய்து பார்த்தபோது கழிவறைக்கு செல்லும் பெண்களை படம்பிடித்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து ராமாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தமிழரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.