குஜராத் மாநிலத்தில் 1400 கோடி ரூபாய் கிரிக்கெட் சூதாட்ட மோசடி நடைபெற்றுள்ளதை அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் உறுதி செய்துள்ளனர். இருந்தபோதும் இதுதொடர்பாக இதுவரை யாரையும் கைது செய்ய முடியவில்லை. லண்டன் மற்றும் துபாய் உள்ளிட்ட இடங்களில் இருந்து செயல்படும் புக்கிகள் மூலம் இந்த சூதாட்ட மோசடி நடைபெற்றுள்ளதாகவும் இதில் நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிம்-மின் பங்கு இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. ஆகாஷ் ஓஜா என்பவரது ஆதார் மற்றும் பான் எண்ணை வைத்து போலியாக துவக்கப்பட்ட வங்கி கணக்கில் […]
