ஜலகண்டாபுரம்: சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் பகுதியில் இருந்து, நேற்று மாலை தேங்காய் லோடு ஏற்றிய டாரஸ் லாரி தாரமங்கலம் சென்றது. அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காட்டுராஜா(35) ஓட்டிச் சென்றார். செலவடை பஸ் நிறுத்தம் அருகே, முன்னால் சென்ற லாரியை முந்துவதற்காக திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி, எதிரே வந்த 3 டூவீலர்கள் மீது பயங்கரமாக மோதியது. நிறுத்தாமல் சென்ற லாரியை துரத்திச் சென்று மக்கள் மடக்கி நிறுத்தினர். டூவீலரில் வந்த தாரமங்கலம் அருகே ராமிரெட்டிப்பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன்(25), ஒன்றரை வயது குழந்தை யுவஸ்ரீ, சகோதரி மகன் சந்தோஷ் (15), ஜலகண்டாபுரம் செந்தில் மனைவி சாந்தி(35) ஆகிய 4 பேர் பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெறுகின்றனர். போதையில் இருந்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
