சென்னை: போதை பழக்கத்துக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் கையெழுத்திட்டார்.
தமிழ்நாட்டு இளைஞர்களை, மாணவர்களை போதைக் கலாச்சாரத்தில் இருந்து விடுவிக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் தாராளமாய் கிடைக்கும் மது, கஞ்சா உள்ளிட்ட பொருட்களை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மக்களிடம் ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த இயக்கத்திற்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், முக்கிய பிரபலங்கள் கையெழுத்திட்டு வருகின்றனர். இதன்படி நடிகர் ரஜினிகாந்த் இன்று (பிப்.25) போதை பழக்கத்துக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவாக கையெழுத்திட்டார்.
#போதையற்றதமிழ்நாடு முழக்கத்தினை முன்வைத்து #DYFI நடத்தும் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கையெழுத்திட்டு வாழ்த்தினார். @rajinikanth
மிகச்சிறந்த பணிக்கு எனது வாழ்த்துகள் என வழியனுப்பினார். #ஒருகோடிகையெழுத்து#NoToDrugs#DYFITAMILNADU pic.twitter.com/7LDAeDMLIv
— DYFI Tamil Nadu (@DyfiNadu) February 25, 2023