இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 218 பேருக்கு கொரோனா: சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை உயர்வு.! ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2,149 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 218 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2,149 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 769 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு சிக்கிமில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கேரளாவில் ஏற்கனவே ஏற்பட்ட 4 உயிரிழப்புகள் தற்போது கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நேற்று 5 பேரின் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.46 கோடியாகவும் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தோர் விகிதம் 98.80 சதவிகிதம் ஆகவும் உள்ளது. நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 220.36 கோடியாக உயர்ந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.