காந்தாரா கெட்டப்பில் கலக்கும் புகழ்..! எத்தனை மணி நேரம் மேக்கப் போட்டார் தெரியுமா?

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு, அது இது எது உள்ளிட்ட காமெடி நிகழ்ச்சிகளில் நடித்த புகழ், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகப் பிரபலமடைந்தார். அந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு எபிசோடுகளிலும் அவர் போட்ட காமெடி கலாட்டா நகைச்சுவைகள் செம ஹிட் அடித்தது. பாடி ரியாக்ஷனில் கலக்கிய அவருக்கு பட வாய்ப்புகளும் தேடி வந்தன. இப்போது வெள்ளித்திரையில் யோகிபாபுவுக்கு அடுத்தபடியாக பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். அத்துடன் குக்வித் கோமாளி தற்போதைய நிகழ்ச்சியிலும் காமெடியனாக பங்கெடுத்து வருகிறார். இவருக்கான சமூகவலைதள ரசிகர்கள் மில்லியன் கணக்கில் இருக்கின்றனர்.

வேலையில் இருந்து திரும்பிய பிறகு ரிலாக்ஷாவதற்கு இவருடைய வீடியோக்களை போட்டு பார்ப்பவர்கள் ஏராளம். அதற்கேற்ப எப்போதும் சமூகவலைதளங்களில் ஆக்டிவாகவே இருப்பார். இப்போது கன்னடம் மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த காந்தாராவில் ரிஷப் ஷெட்டி போட்ட பஞ்சுருளி கலைஞர் வேடத்தை போட்ட வீடியோவை பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகியுள்ளது. சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக அமர்ந்து பஞ்சுருளி கலைஞர் வேடத்தை போட்டிருக்கிறார். மேலும், அந்த வீடியோவுக்கு போட்டிருக்கும் கேப்சனில், இந்த வேடத்தை போட உதவிய அனைத்து மேக்கப் கலைஞர்களுக்கும், பாரம்பரிய பஞ்சுருளி கலைஞர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்திருக்கிறார்.

காந்தாரா படம் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. கன்னட பாரம்பரியமான துளு மொழி பேசும் மக்களின் கலாச்சாரத்தை மையமாக கொண்டு அந்த படம் உருவாக்கப்பட்டது. கன்னட மொழி படம் என்றாலும் பல மொழிகளில் வெளியிடப்பட்டது. அனைத்து மொழி மக்களிடமும் இந்தப் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. பாக்ஸ் ஆஃபீஸிலும் 500 கோடிக்கும் மேல் வசூலை வாரிக் குவித்தது. குறிப்பாக, பாலிவுட் திரையுலகிலும் காந்தாராவுக்கு எதிர்பார்க்காத வரவேற்பு இருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.