இலங்கையின் தம்புல்லா அணிக்காக விளையாடி வரும் வனிந்து ஹசரங்கா 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், அதிரடியாக 95 ஓட்டங்கள் விளாசினார்.
தேசிய சூப்பர் லீக்
நான்கு நாட்கள் கொண்ட தேசிய சூப்பர் லீக் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் ஜாஃப்னா, கண்டி, தம்புல்லா, காலே உள்ளிட்ட அணிகள் விளையாடி வருகின்றன.
கொழும்பில் நடந்த போட்டியில் தம்புல்லா அணி முதல் இன்னிங்சில் 426 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஜாஃப்னா அணி 236 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
தம்புல்லா அணிக்காக விளையாடி வரும் வனிந்து ஹசரங்கா மிரட்டலாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.
Wanindu Hasaranga takes 6 wickets as Jaffna bowled out for 236.
Match Centre: https://t.co/nauX7meidz#NSL23 pic.twitter.com/nWnRRJbAT3
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) February 25, 2023
ருத்ர தாண்டவம் ஆடிய ஹசரங்கா
அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்க்சை தொடங்கிய தம்புல்லா 6 விக்கெட்டுக்கு 254 ஓட்டங்கள் எடுத்தது.
துடுப்பாட்டத்தில் ருத்ர தாண்டவம் ஆடிய ஹசரங்கா, டி20 கிரிக்கெட் போல அதிரடியாக 66 பந்துகளில் 95 ஓட்டங்கள் விளாசினார். இதில் 6 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கும்.
After taking a six-wicket haul, Wanindu Hasaranga shines with the bat 🌟
Match Centre: https://t.co/nauX7meidz#NSL23 pic.twitter.com/x11vc9BNlC
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) February 25, 2023