தமிழக அரசின் மதுபான கடையான டாஸ்மாக் கடையில், கடனாக மதுபானம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டிய இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பகுதியில் தமிழக அரசின் மதுபான கடையில் (டாஸ்மாக்) நேற்று மதுபானம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குப்புரொட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ், மனோகரன் ஆகிய இருவரும் கடனுக்கு மதுபானம் கேட்டு டாஸ்மார்க் கடை மேற்பார்வையாளர் பாலகிருஷ்ணனிடம் தகராறில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து காணொளியை பதிவு செய்த பாலகிருஷ்ணன், லாலாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பாலகிருஷ்ணன் பதிவு செய்த அந்த காணொளியில் வெங்கடேஷ் மற்றும் மனோகரன் கடனாக மதுபானம் கேட்டதும், கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் பதிவாகியிருந்தது.
இது குறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிய வேலைக்கு வருகிறது.
இதனை அடுத்து இருவர் மீதும் கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.