தென் கடலோர மாவட்டங்கள், டெல்டாவில் 2 நாட்கள் மழை

சென்னை: தமிழகத்தில் டெல்டா, தென் கடலோர மாவட்டங்களில் வரும் 27, 28-ம் தேதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பிப்.26-ம் தேதி (இன்று) பொதுவாக வறண்ட வானிலை நிலவும். 27, 28-ம் தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 1-ம் தேதி தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும். மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் தெளிவாக இருக்கும். வெப்பநிலை 22 டிகிரி முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.

25-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 36.6 டிகிரி, குறைந்தபட்சமாக சமவெளி பகுதியான நாமக்கல்லில் 16 டிகிரி, மலைப் பிரதேசமான ஊட்டியில் 7.6 டிகிரிசெல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.