நண்பனின் தலையை துண்டித்து புகைப்படமாக காதலிக்கு அனுப்பிய 21 வயது இளைஞர்! அதிர வைத்த சம்பவம்


இந்திய மாநிலம் தெலங்கானாவில் காதலிக்கு தொல்லை கொடுத்த தனது நண்பனின் தலையை துண்டித்து கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

முக்கோண காதல்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் ஹரி ஹர கிருஷ்ணா(21). இவரும் நவீன் (22) என்ற இவரது நண்பரும் தங்கள்
கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை காதலித்தனர்.

இருவரில் நவீனின் காதலை அந்த மாணவி ஏற்றுள்ளார். ஆனால் இரண்டு ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

அப்போது ஹரி ஹர கிருஷ்ணா தனது காதலை வெளிப்படுத்த குறித்த மாணவியும் அதற்கு சம்மதம் தெரிவிக்கவே, இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

தொல்லை கொடுத்த நண்பன்

இந்த நிலையில் காதலியை மறக்க முடியாத நவீன் அடிக்கடி அவருக்கு போன் செய்வது, குறுஞ்செய்திகள் அனுப்புவது என தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனால் வேதனையடைந்த மாணவி காதலன் ஹரி ஹர கிருஷ்ணாவிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

நண்பனின் தலையை துண்டித்து புகைப்படமாக காதலிக்கு அனுப்பிய 21 வயது இளைஞர்! அதிர வைத்த சம்பவம் | Youth Kill His Friend Brutely For Lover Telangana

இது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. பின்னர் நவீனை கொலை செய்ய முடிவு எடுத்த கிருஷ்ணா, அதற்காக மூன்று மாதங்கள் திட்டமிட்டுள்ளார்.

கொடூர கொலை

அதன்படி கடந்த 17ஆம் திகதி நவீனை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற கிருஷ்ணா, அதன் பின்னர் கல்லாரி விடுதியில் விட்டுவிடுவதாக கூறி இருசக்கர வாகனத்தில் கூட்டிச் சென்றுள்ளார்.

ஆனால் வழியில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று அவருடன் மது அருந்தியுள்ளார்.

அச்சமயம் காதலி குறித்து பேச்சு எழ இருவருக்கும் வாக்குவாதம் உண்டானது. அப்போது கிருஷ்ணா மறைந்து வைத்திருந்த கத்தியை எடுத்து நவீனை கொடூரமாக தாக்கி கொலை செய்தார்.

பின்னர் அவரது தலையை துண்டித்த கிருஷ்ணா, இதயம் உட்பட உடலின் பாகங்களை வெட்டி எடுத்து, அவற்றை புகைப்படமாக எடுத்து காதலிக்கு அனுப்பியுள்ளார்.

நண்பனின் தலையை துண்டித்து புகைப்படமாக காதலிக்கு அனுப்பிய 21 வயது இளைஞர்! அதிர வைத்த சம்பவம் | Youth Kill His Friend Brutely For Lover Telangana

@ANI

பொலிஸில் சரண்

இந்த சம்பவம் நடந்து 9 நாட்கள் கழித்து ஹரி ஹர கிருஷ்ணா நேற்று காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரது வாக்குமூலத்தை கேட்டு பொலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.

அதன் பின்னர் நவீனின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காதலிக்கு தொல்லை கொடுத்த நண்பன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தையே அதிர வைத்துள்ளது.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.