பாடூர் பகவதி அம்மன் கோயில் திருவிழாவில் வளர்ப்பு யானை மிரண்டு ஓடியதால் பரபரப்பு: 7 பேர் காயம்

பாலக்காடு:  பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் அருகே பாடூர் பகவதி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழா ஊர்வலத்திற்கு நேற்றுமுன்தினம் இரவு தெச்சிக்கோட்டுக்காவு ராமசந்திரன் என்ற வளர்ப்பு யானையை விழா கமிட்டியினர் வரவழைத்து இருந்தனர். யானை மீது அம்மன் ஊர்வலம் முடிந்தநிலையில், யானையை தோட்டத்தில் கட்டுவதற்காக, பாகன் கொண்டு சென்றார். அப்போது, யானையின் பின்னால் வந்த மற்றொரு யானை ஒன்று முட்டியதால் தெச்சிக்கோட்டுக்காவு ராமசந்திரன் என்ற யானை மிரண்டோடியது.  

இதனால், மக்கள் சிதறியடித்து ஓடியதில் யானையின் பாகன் நெம்மாராவைச் சேர்ந்த ராமன் (60) உட்பட 7 பேர் கீழே விழுந்து காயமடைந்தனர். இவர்களை போலீசாரும், விழாக்கமிட்டியினரும் மீட்டு ஆலத்தூர் தாலுகா அரசு மருத்துவமயைனில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிறிது நேரத்திற்குள் யானையை மாற்று பாகன்கள் ஒருங்கிணைந்து கட்டுப்படுத்தி சங்கிலியால் பிணைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.