அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என கூறினார். அவரது குடும்பத்தாரின் ஒப்புதல் பெற்ற பிறகே இந்த அறிவிப்பை தான் வெளியிடுவதாகவும் கூறி வருகிறார். அவருடைய இந்த அறிவிப்பு தமிழகத்தில் மட்டுமல்லாது, இலங்கையிலும் சலசலப்பை உருவாக்கியுள்ளது. இலங்கை ராணுவம் பிரபாகரன் உயிரோடு இருப்பதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. அத்துடன், தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகளை அதிகப்படுத்த தொடங்கியிருக்கிறது.
இந்நிலையில், பிரபாகரன் உயிரோடு இருப்பது குறித்து பேசியிருக்கும் கொளத்தூர் மணி, அவர் உயிருடன் இருப்பதை தங்களால் உறுதி செய்ய முடியவில்லை என கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், பழ நெடுமாறனின் அறிவிப்புக்கு பின்னணி காரணத்தையும் சுட்டிக் காட்டியுள்ளார். கொளத்தூர் மணி பேசும்போது, பழ. நெடுமாறன் கூறியிருப்பது போல விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி. ஆனால் எங்களுக்கு அதுபற்றி எந்தவிதமான ஆதாரங்கள் இல்லாததால் உறுதி செய்ய முடியவில்லை.
ஆனால் அவர் வருவார் என்ற செய்தி தமிழ் மக்களுக்கு உற்சாகத்தையும், உறுதியையும் கொடுக்கும். அந்தவகையில் அது நம்பிக்கை இருப்பதாக கருதுகின்றேன். பிரபாகரன் உயிரோடு இருப்பதாக வந்த செய்தியினால் வட இலங்கையில் நிறுத்தப்பட்டிருக்கும் இலங்கை ராணுவம் விளக்கிக் கொள்ளாமல் தொடர்வதற்கு ஒரு காரணமாக அமையலாம். மேலும், பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் கூறி இருக்கிறது. பிரபாகரன் உயிரோடு இருப்பதாக வந்த செய்தியை காரணமாக கூறி அவர்கள் அதை கொண்டு வராமல் இருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது. மேலும் இலங்கையின் அரசியல் நகர்வுகளுக்கு உலகநாடுகள் உதவ முன் வரலாம். அதற்கு காலம் தான் விடை சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ