பிரித்தானியாவைவிட்டு வெளியேறி கடற்கரை நகரம் ஒன்றில் குடியேறும் மக்கள்: பிரமிக்க வைக்கும் எண்ணிக்கை


பிரித்தானியாவில் இருந்து 50,000 பேர்களுக்கும் மேல் வெளிநாட்டில் கடற்கரை நகரம் ஒன்றில் குடியேற பதிவு செய்து காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரம்

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், போதிய ஊதியமின்மை காரணமாக அவதிப்பட்டு வந்த பிரித்தானியர்களுக்கு அதிரவைக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது மேற்கு அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரம்.

பிரித்தானியாவைவிட்டு வெளியேறி கடற்கரை நகரம் ஒன்றில் குடியேறும் மக்கள்: பிரமிக்க வைக்கும் எண்ணிக்கை | Brits Sign Up To Live In Coastal City

@getty

இங்குள்ள பணியிடங்களை நிரப்பும் நோக்கில் சுமார் 31,000 பிரித்தானியர்களுக்கு மூன்று மடங்கு ஊதியம் அளிப்பதாக கூறி விளம்பரம் செய்திருந்தது பெர்த் நகர நிர்வாகம்.
மட்டுமின்றி, இந்த வார இறுதியில் பெர்த் நகர நிர்வாகிகள் பிரித்தானியாவுக்கு வருவதுடன், தங்களுக்கு தேவையான தொழிலாளர்களை தெரிவு செய்யவும் உள்ளனர்.

சிறந்த ஊதியம், அருமையான காலநிலை என தொழிலாளர்களை கவரும் பல திட்டங்களும் அவர்கள் முன்வைக்க உள்ளனர்.
இந்த நிலையில், தற்போது பிரித்தானியா மற்றும் அயர்லாந்தில் இருந்து சுமார் 50,000 பேர்கள் வேலை மற்றும் ஊதியம் தொடர்பில் பெர்த் நகர நிர்வாகத்திடம் மேலதிக தகவல் கேட்டு கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி, பிரித்தானிய தொழிலாளர்களை ஈர்க்கும் தங்களின் திட்டத்தை பிப்ரவரி 16ம் திகதி மேற்கு ஆஸ்திரேலியா அமைச்சர் ஒருவரும் வெளிப்படுத்தியிருந்தார்.
செவிலியர்கள், ஆசிரியர்கள், காவல்துறை, சுரங்கத் தொழிலாளர்கள், மருத்துவர்கள், பிளம்பர்கள் மற்றும் எலக்ட்ரீஷியன்கள் உள்ளிட்ட வேலை வாய்ப்புகள் அதிகமிருப்பதாக கூறப்படுகிறது.

மூன்று மடங்கு அதிக ஊதியம்

மேலும், குறிப்பாக புவியியலாளர்கள் மற்றும் டிரில்லர்களுக்கு சராசரி பிரித்தானிய சம்பளத்தை விட மூன்று மடங்கு அதிகமாக மேற்கு ஆஸ்திரேலியாவில் ஊதியம் வழங்கப்படுகிறது.

பிரித்தானியாவைவிட்டு வெளியேறி கடற்கரை நகரம் ஒன்றில் குடியேறும் மக்கள்: பிரமிக்க வைக்கும் எண்ணிக்கை | Brits Sign Up To Live In Coastal City

@getty

பிரித்தானியாவில் 27,000 முதல் 29,000 பவுண்டுகள் வரையில் இவர்களுக்கு ஊதியமளிக்கப்படுகிறது.
தற்போதைய சூழலில் மேற்கு ஆஸ்திரேலியா நிர்வாகம் பிரித்தானிய ஊழியர்களை கவரும் பொருட்டு, அதிக ஊதியம், மிக குறைவான மின் கட்டணம், சிறந்த குடியிருப்பு வசதிகள் மற்றும் கவற்சியான வாழ்க்கை முறை என விளம்பரப்படுத்துகின்றனர்.

மேலும், செவிலியர்களை பொறுத்தமட்டில், பிரித்தானியாவில் பெறும் ஊதியத்தைவிடவும் 58% அதிகமாக அவுஸ்திரேலியாவில் வழங்கப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட அவுஸ்திரேலியா-பிரித்தானியா இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தவுடன், பிரித்தானியா குடிமக்கள் அவுஸ்திரேலியாவில் பணிபுரிவது எளிமையாக்கப்படும் என்றே கூறப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.