மதுரை: மதுரை காமராஜர் பல்கலை. கல்லூரி தேர்வு மையத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வில் வினாத்தாள், பதிவெண் மாறி இருந்தது. சில பதில்கள் எழுதிய நிலையில் தேர்வு நிறுத்தப்பட்டது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்திலிருந்து வந்திருந்த மாணவி, ‘‘எனக்கு இந்தி மட்டுமே தெரியும். மிகவும் கஷ்டப்பட்டு தமிழ் படித்து தேர்வு எழுத வந்தேன். குளறுபடியால் தேர்வு எழுத முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்’’ எனக்கூறி கதறி அழுதார். அதிகாரிகள் சமாதானப்படுத்தி மீண்டும் தேர்வெழுத வைத்தனர்.
