ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே, ஓட்டலில் சிலிண்டர் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சைனீஸ் வகை உணவு தயாரிக்க ஓட்டலின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிய வந்துள்ளது.
