கள்ளக்குறிச்சி சேலம் பிரதான சாலையில் அமைந்துள்ள தனியார்
வங்கி ATM-ல், கடந்த 24ம் தேதி இரவு பணம் செலுத்த சிடிஎம் மிஷினில் ஒரு நபர் 50,000 ரூபாய் ரொக்க பணத்தை தன்னுடைய வங்கி கணக்கில் செலுத்தி விட்டு, பணம் எண்ணி முடிப்பதற்குள் ஏறி விட்டதாக நினைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
இத்தகைய நிலையில், அவருக்கடுத்து அதே ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க
கச்சிராயபாளையத்தைச் சேர்ந்த, செந்தில் முருகன் எனும் இளைஞர் ஏடிஎம்முக்கு சென்றுள்ளார். பின், சிடிஎம் மிஷினில் இருந்து சத்தம் வந்து கொண்டே இருந்தது.
அங்கு சென்று பார்க்கையில் கட்டுக் கட்டாக பணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து, பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்த அந்த நபர் ரூ.50, 000-ஐ எடுத்துக்கொண்டு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளார்.
இந்த செயலில் ஈடுபட்ட செந்தில் முருகனுக்கு, தற்போது பொதுமக்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அவர் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்ட காவல்துறையினர், உரியவரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.