100 பேர்களை காவு வாங்கிய கொடூர சம்பவம்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி

பாகிஸ்தானில் மசூதி ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட வெடிகுண்டு தாக்குதலானது காவல்துறைக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கை என கூறப்படுகிறது. பலி எண்ணிக்கை 100 பொலிஸ் தலைமையகத்தில் அமைந்துள்ள மசூதியிலேயே குறித்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கைகள் முடிவடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 100 என தெரிவிக்கப்பட்டுள்ளது. @AFP பெஷவாரில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தில் சம்பவத்தின் போது 300 முதல் 400 பொலிசார் தொழுகைக்காக திரண்டிருந்தனர். அப்போது தற்கொலை குண்டுதாரி வெடிகுண்டை வெடிக்க செய்தாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவத்தில், … Read more

பிப்ரவரி 01: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 256-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 256-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சவுதி அரேபியாவில் ஈரான் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: குண்டு பாய்ந்து குமரி மீனவர் படுகாயம்

நாகர்கோவில்: சவுதி அரேபியா கடலில் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் குமரி மீனவர் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்தவர் ராஜேஷ் குமார்(37). சின்னமுட்டம் கிராமத்தை சேர்ந்த பிரிட்டோ, செபாஸ்டின், பெரியகாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த கபிலன், நெல்லை மாவட்டம் பெருமணலை சேர்ந்த  துரைராஜ் ஆகிய 5 மீனவர்கள் சவுதி அரேபியா நாட்டின் கத்திப் என்ற பகுதியிலிருந்து கடந்த ஜனவரி 21ம் தேதி அரேபிய முதலாளிக்கு சொந்தமான ‘ரஸ்மா அல் … Read more

பிப்-01: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

காவிரியின் குறுக்கே தண்ணீர் எடுக்க கர்நாடகா அரசுக்கு தடை விதிக்க வேண்டும்: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: காவிரியின் குறுக்கே சட்ட விரோதமாக கர்நாடகா அரசு தண்ணீர் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய இடைக்கால மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதர்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்து மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன் உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய இடைக்கால மனு ஒன்றை … Read more

'விஜய் 67' காஷ்மீர் சென்ற த்ரிஷா, பிரியா ஆனந்த்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்க உள்ள 'விஜய் 67' படத்தின் படக்குழுவினர் இன்று(ஜன., 31) காலை சென்னையிலிருந்து காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகருக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றனர். அந்த விமானத்தில் யார் யார் பயணித்துள்ளார்கள் என்பது குறித்து பயணிகள் விவரத்தை தேடி எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவவிட்டுள்ளார்கள். அந்தப் பட்டியலில் த்ரிஷா, பிரியா ஆனந்த் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். இதன் மூலம் இப்படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த் நடிப்பது உறுதியாகி உள்ளது. காஷ்மீரில் ஒரு … Read more

10,000 முன்பதிவுகளை கடந்த மஹிந்திரா XUV400 EV கார் சிறப்புகள்

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ள நவீன வசதிகளை பெற்ற XUV400 EV காரின் ரேஞ்சு அதிகபட்சமாக 456 கிமீ ஆக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரூபாய் 15.99 லட்சம் விலையில் துவங்கி ரூ.18.99 லட்சம் வரை விலை நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 26 ஆம் தேதி முன்பதிவு துவங்கப்பட்ட நிலையில் 10,000 முன்பதிவுகளை குவித்துள்ளது. XUV400 காத்திருப்பு காலம் தற்போது ஏழு மாதங்களாக அதிகரித்துள்ளது என மஹிந்திரா தெரிவித்துள்ளது. மஹிந்திரா XUV400 EV முதல் 5000 கார்களுக்கு மட்டும் அறிமுக … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கும் வேட்பாளராக 'தேர்தல் மன்னன்'! 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலின் முதல் நாளான இன்று சுயேச்சை வேட்பாளர்கள்  4 பேர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மீனாட்சிசுந்தரனார் சாலையில் அமைந்துள்ள ஈரோடு மாநகராட்சியின் பிரதான கட்டடத்தில், ஆணையர் அறையில் இன்று காலை முதல் வேட்பு மனுத்தாக்கல் துவங்கியது.  தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆணையர் கே.சிவகுமார் வேட்பு மனுக்களை பெறுவதற்காக அமர்ந்திருந்தனர். மேலும், வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு … Read more

மெரினாவில் பேனா வைத்தால் உடைப்பேன்: கருத்து கேட்பு கூட்டத்தில் சீமான் ஆவேசம்

மெரினாவில் பேனா வைத்தால் உடைப்பேன்: கருத்து கேட்பு கூட்டத்தில் சீமான் ஆவேசம் Source link

பாராளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் : நிதியமைச்சர் தாக்கல் செய்கிறார்..!!

2023-24-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்ய உள்ளார். அடுத்த ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் முழு நிதியாண்டுக்கான கடைசி பட்ஜெட் இதுவாகும். பா.ஜ.க. தலைமையிலான அரசின் கடைசி முழு நீள பட்ஜெட் என்பதால், நடுத்தரப் பிரிவு மக்களை கவர்வதற்கான திட்டங்கள் இதில் இடம்பெறும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. குறிப்பாக ரூ.2.5 … Read more