இந்த அறிய நிகழ்வை இன்று முதல் 4 மாதங்களுக்கு வானில் பார்க்கலாம்..!!

சூரிய குடும்பத்தின் பரந்த வான்வெளியில் சிறிய மாற்றங்களை கூட கண்டறியும் ஜூவிகி என்ற தொலைநோக்கி மூலம், பூமியின் சுற்றுவட்டப்பாதையில் பச்சை நிற வால் நட்சத்திரம் வரவுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வால் நட்சத்திரம் கடந்த 12-ந்தேதி சூரியனை கடந்து வந்துள்ளது. இது,இன்று (புதன்கிழமை) பூமிக்கு மிக அருகாமையில் வரும். இந்த அறிய நிகழ்வை தொலைநோக்கியின் உதவி இல்லாமல் வெறும் கண்களால் அனைவரும் பார்க்கலாம்.கடந்த 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இந்த நிகழ்வு நடக்கிறது. இதுகுறித்து நேற்று காலை விஞ்ஞானிகள் … Read more

குட் நியூஸ்..!! பிப். 15-வரை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு..!!

தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் அறிவித்தது. இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி முதல் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வந்தது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 31-ம் தேதி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் படி, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் … Read more

ஒன் பை டூ: “பிபிசி ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடைவிதித்தது சரியா?”

கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர், சி.பி.எம்“அரசுக்கு எதிரான கருத்துகளை, நாட்டுக்கு எதிரான கருத்து என்று பேசுவது, அதைத் தடை செய்வது என  ஜனநாயகத்துக்கு எதிரான வேலைகளைத் தொடர்ந்து செய்துவருகிறது  மோடி அரசு. அவசரகால நிலையை நடைமுறைக்குக் கொண்டுவந்து, பிபிசி ஆவணப்படத்தைத் தடை செய்திருப்பது அதன் தொடர்ச்சிதான். ‘எல்லையைப் பாதுகாக்கக் கூட துப்பில்லாத அரசு’ என்று சொன்னால்,  ‘அய்யோ நம் ராணுவ வீரர்களை அவமானப்படுத்திவிட்டார்கள்’ என்று பிரச்னையை திசை திருப்புபவர்கள்தான் பா.ஜ.க-வினர். அதே பாணியில், சிறுபான்மையினரை திட்டமிட்டுக் கொன்று குவித்த … Read more

பணப்பட்டுவாடா குறித்த அமைச்சர் பேச்சு – தேர்தல் அதிகாரியிடம் பாஜக, அதிமுக புகார்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அமைச்சர் கே.என்.நேருவின் பேச்சு குறித்து பாஜக மற்றும் அதிமுக சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைச்சர் கே.என்.நேரு பணப்பட்டுவாடா குறித்து பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையானது. இந்நிலையில், நேற்று பாஜக சார்பில் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், பால் கனகராஜ், நாராயணன் திருப்பதி, கராத்தே தியாகராஜன் ஆகியோர் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் புகார் மனு … Read more

ஆந்திராவின் புதிய தலைநகரமாகிறது விசாகப்பட்டினம் – முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு

விசாகப்பட்டினம்: ஆந்திராவின் புதிய தலைநகரமாக விசாகப்பட்டினம் ஓரிரு மாதங்களில் அறிவிக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று தெரிவித்துள்ளார். இதற்கு ஆந்திர மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்த விஷயம்தான் தற்போது ஆந்திர மாநிலம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. இதுகுறித்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாவது: மார்ச் மாதம் 3, 4-ம் … Read more

பாக். மசூதி குண்டுவெடிப்பில் உயிரிழப்பு 100 ஆக அதிகரிப்பு

பெஷாவர்: பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்கவா மாகாணத் தலைநகர் பெஷாவரில் பாதுகாப்பு மிகுந்த போலீஸ் லைன்ஸ் பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு மசூதியில் நேற்று முன்தினம் மதியம் தொழுகை நடைபெற்றது. இந்நிலையில் தொழுகையை இமாம் தொடங்கிய அடுத்த சில வினாடிகளில் முதல் வரிசை யில் இருந்த ஒருவர் தனது உடலில் பொருத்தியிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச்செய்தார். மதியம் 1.40 மணிக்கு நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பில் மசூதியின் கூரை இடிந்து, தொழுகையில் ஈடுபட்டிருந்தவர் கள் மீது விழுந்தது. இதையடுத்து … Read more

பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து உலக வங்கி – அரசாங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை

முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் உலக வங்கியின் பூர்வாங்க நடவடிக்கைகள்” தொடர்பிலான மீளாய்வுக் கலந்துரையாடல் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் இடம்பெற்றுள்ளது. பொருளாதாரத்தின் போட்டித்தன்மை உலக வங்கியின் உதவித் திட்டம் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், நிதி மேற்பார்வை மற்றும் கடன் முகாமைத்துவத்தை மேம்படுத்துதல், வரி நிர்வாகக் கொள்கையை மேம்படுத்துதல், இறையாண்மை நிதித் துறையில் ஏற்படும் படிப்படியான அபாயத்தைக் குறைத்தல், சமூகப் … Read more

எங்களை கொல்ல முயன்றார்… டெஸ்லா வாகன விபத்து தொடர்பில் இந்திய கணவர் மீது மனைவி புகார்

வடக்கு கலிபோர்னியாவில் செங்குத்தான பாறை ஒன்றின் மீதிருந்து டெஸ்லா வாகனத்துடன் குதித்த விவகாரத்தில், கணவர் கொல்ல முயன்றதாக மனைவி புகார் அளித்துள்ளார். கணவர் கொல்ல முயற்சி இந்தியரான 41 வயது மருத்துவர் தர்மேஷ் பட்டேல் என்பவரே தமது டெஸ்லா வாகனத்தில் மனைவி நேஹா மற்றும் இரு பிள்ளைகளுடன் வடக்கு கலிபோர்னியாவில் அமைந்துள்ள செங்குத்தான பாறை ஒன்றின் மீதிருந்து தற்கொலைக்கு முயன்றவர். Image: Newsflash ஆனால் அதிர்ஷ்டவசமாக மொத்த குடும்பமும் உயிருக்கு ஆபத்தின்றி தப்பியது. டிசம்பர் 2ம் திகதி … Read more

ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை

மதுரை: ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் தாயும், மகனும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். மதுரை, கரிமேடு நடராஜ் நகரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (72). இவரது மகன் உமாசங்கர் (42). கடந்த இரு தினங்களாக இவர்களது வீடு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், வென்டிலேட்டரை உடைத்து பார்த்த போது, தாயும் மகனும் இறந்து கிடந்துள்ளனர். தகவலறிந்து கரிமேடு போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அந்த வீட்டிலிருந்து உமாசங்கர் எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், “நாங்கள் தற்கொலை … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,761,967 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.61 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,761,967 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 675,144,399 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 647,515,517 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 42,065 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.