
இணையச் சேவை மற்றும் போன் கால் விலையை ஏர்டெல் நிறுவனம் மீண்டும் உயர்த்த உள்ளது.
ஏர்டெல் நிறுவனத் தலைவர் சுனில் பார்தி மிட்டல் சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், லாபம் குறைந்துள்ளதால் ரிசார்ஜ் விலையை மீண்டும் உயர்த்த வேண்டி இருப்பதாக தெரிவித்தார்.
இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஏர்டெல் நிறுவனம் தனது குறைந்தபட்ச ரீசார்ஜ் பிளானான ரூ.99ஐ ஏற்கனவே நிறுத்திவிட்டனர். அதை ரூ.300 வரை மாற்றவுள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் உட்கட்டமைப்புகளில் இந்திய அரசு கவனம் செலுத்தி வருவதாகவும், பிஎஸ்என்எல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்களின் உதவியுடன் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் கட்டமைப்புகளை அரசு உயர்த்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் 30 ஜிபி டேட்டா வரை விலையில்லாமல் உபயோகித்து வருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார். 5 ஜி குறித்து பேசிய அவர், நாடு முழுவதும் 5ஜி சேவையை வழங்கத் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
இப்போதும் 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் 2ஜி சேவையை உபயோகித்து வருவதாக கூறிய அவர், அதனால் 2ஜி சேவையை நிறுத்துவதாக இல்லை என்று தெரிவித்துள்ளார்.
newstm.in