அரசால் வழங்கப்படும் இலவசங்களை விரும்பாதவர்கள் இதை செய்யலாமே..!!

புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் குடிமைப்பொருள் வழங்கல் துறையால், கவுரவ குடும்ப அட்டைகள் வழங்கப்பட உள்ளது. புதுச்சேரியில் தற்போது அனைத்து வகை: சிவப்பு/மஞ்சள் நிறம்) குடும்ப அட்டை பெற்றுள்ளவர்களும் கவுரவ குடும்ப அட்டை பெற தகுதி வாய்ந்தவர்கள். அரசின் இலவசங்கள் தேவைப்படாத வசதி வாய்ந்த குடும்பங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளும்படி வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள்

கவுரவ குடும்ப அட்டை பெற்றவர்கள், புதுவையின் சிறப்பு பிரஜைகளாக கருதப்பட்டு குடிமைப்பொருள் வழங்கல் துறையால் வழங்கப்படும் அரசின் இலவசங்கள் எதுவும் வழங்கப்படாது. புதிய கவுரவ குடும்ப அட்டை வேண்டுபவர்கள் குடும்ப தலைவர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தையும் அசல் குடும்ப அட்டையையும் குடிமைப்பொருள் வழங்கல் நுறை அலுவலகத்தில் ஒப்படைத்து கவுரவ குடும்ப அட்டை பெற்றுக்கொள்ளலாம். உதவிக்கு 9442194480 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு அல்லது அதே எண்ணில் Whatsapp/ குறுஞ்செய்தி மூலமாக தகவல் பெறலாம். மின்னஞ்சல் முகவரி: [email protected] -ஐ தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.