
ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட பாஜகவினர் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஆண்டைவிட அதிமுகவுக்கு கடும் சறுக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றுள்ளார்.
இது கடந்த தேர்தலை ஒப்பிடும் போது குறைவு என்றாலும், நாம் தமிழர் கட்சிக்கு ஓரளவு ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், ஈரோடு தேர்தலில் பாஜகவினர் சிலர், கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு வாக்கு கேட்பதற்கு பதிலாக, நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு கேட்டது தெரியவந்தது.

ஈரோடு தேர்தலில் பாஜக போட்டியிடவில்லை. அதற்கு பதிலாக, கூட்டணியில் உள்ள அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தது. கட்சி நிர்வாகிகள் அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பார்கள் என்று அண்ணாமலை அறிவித்தார்.
இந்நிலையில் நாம் தமிழர் வேட்பாளர் மேனாவின் சமூகத்தை சேர்ந்த பாஜகவினர், அதிமுகவுக்கு வாக்கு கேட்பதற்கு பதிலாக, மேனகாவுக்கு வாக்கு கேட்டு பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விஷயம் தெரியவந்ததை அடுத்து, நாம் தமிழருக்கு வாக்கு கேட்ட பாஜகவினர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். பாஜக நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி மாநிலத் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
newstm.in