படப்பிடிப்பு தளத்தில் சில்மிஷம் செய்ததால் பாகுபலி திரைப்படத்தில் நடித்த நடிகை, நடிகைரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற பாகுபலி படத்தில் நோரா ஃபதேஹி என்ற நடிகை நடித்திருந்தார். மனோகரி என்ற பாடலில் வரும் நடிகைகளில் இவரும் ஒருவர்.
இவர் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ரோர்- டைகர்ஸ் ஆஃப் தி சுந்தர்பான்ஸ் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகையாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்துவரும் நோரா ஃபதேஹி தமிழ், தெலங்கு படங்களில் குத்துப்பாடல்களிலும் நடனமாடி வருகிறார். இந்நிலையில் நடிகை நோரா ஃபதேஹி படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து பகிர்ந்துள்ளார்.
தனது முதல் படத்திற்காக சுந்தர்பான்ஸ் காடுகளில் ஷூட்டிங் நடந்த போது, படப்பிடிப்பில் சக நடிகர் ஒருவர் தவறாக நடந்து கொண்டார் என்றும், ஆத்திரத்தில் அவரை அறைந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
பதிலுக்கு அந்த நடிகர் அறைந்தார் என்றும், தன் தலைமுடியை பிடித்து இழுத்தார், நடிகையும் நடிகரின் தலைமுடியை பிடித்து இழுத்ததாக கூறியுள்ளார். அதன்பிறகு பெரிய சண்டையாக மாறிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார். அவரது கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
newstm.in