உலகம் மூன்றாம் உலகப் போரை நோக்கிச் செல்கிறது, அதைத் தடுக்க என்னால் மட்டுமே முடியும்! டொனால்ட் டிரம்ப்


 ரஷ்யா மற்றும் உக்ரைன் போரை என்னால் தடுத்து  நிறுத்த முடியும் என்றும், உலகம் மூன்றாம் உலகப்போரை நோக்கிச் செல்கிறது எனவும் டொனால்ட் டிரம்ப் அரசியல் நடவடிக்கை மாநாட்டில் பேசியுள்ளார்.

போர் வெறியைத் தூண்டும் அரசு

2024 ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் பங்குகளை வியக்கத்தகு முறையில் உயர்த்திய டொனால்ட் டிரம்ப் வாஷிங்டனில் நடைபெற்ற வருடாந்திர அரசியல் நடவடிக்கை மாநாட்டில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய டொனால்ட் டிரம்ப் ”போர் வெறி கொண்ட ஜனநாயகவாதிகளிடமிருந்தும், குடியரசு கட்சியின் சில முட்டாள்களிடமிருந்தும் மக்களைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

மூன்றாம் உலகப் போரை நிறுத்துவேன்

“உலகம் மூன்றாம் உலகப் போரை நோக்கிச் செல்லக்கூடும்” என்ற முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் ”நான் ஓவல் அலுவலகத்திற்கு வருவதற்கு முன்பே, ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான பேரழிவுகரமான போரைத் தீர்த்து வைப்பேன். அது விரைவில் தீர்க்கப்படும்.”என்றார்.

உலகம் மூன்றாம் உலகப் போரை நோக்கிச் செல்கிறது, அதைத் தடுக்க என்னால் மட்டுமே முடியும்! டொனால்ட் டிரம்ப் | Donald Trump Says I Can Stop World War 3 Soon@JOE RAEDLE/GETTY

“இந்த வாக்குறுதியை அளிக்கக்கூடிய ஒரே வேட்பாளர் நான்தான், மூன்றாம் உலகப் போரை நான் தடுப்பேன்.” என ஆவேசமாகப் பேசியுள்ளார்.

அரசியல் மாநாட்டின் அதிகாரப்பூர்வமற்ற முறையில் குடியரசுக் கட்சித் தலைவர்களுக்கான வாக்கெடுப்பில் 62 சதவீத வாக்குகளைப் பெற்று டிரம்ப் வெற்றி பெற்றதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் 20 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற டிசாண்டிஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.