தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் போட்டோ மற்றும் வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி செல்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் வட மாநில தொழிலாளர்கள் தாக்குப்படுவதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் வெளி மாநில தொழிலாளர்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஸ் அழகிரி, வெளி மாநில தொழிலாளர்களை குறித்து சிலர் வேண்டுமென்றே திட்டம் என்று வதந்தி பரப்பி வருகின்றனர். குறிப்பாக பிஜேபி மற்றும் சீமான் போன்றோர் வெளிப்படையாக பேசி வருகின்றன என குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் சீமான் தன்னுடைய சுய விளம்பரத்திற்காக தமிழக மக்களுக்கும் வட இந்தியர்களுக்கும் இடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறார். இது வேண்டுமென்றே திட்டமிட்டு செய்வதை போல இருக்கிறது. தொழிலாளர்களுக்கு மாநிலம், ஜாதி, மதம், மொழி எதுவும் கிடையாது அவர்களுக்கு கை உண்டு, கால் உண்டு, வயிறு உண்டு ஒரு வேலை சோற்றுக்காக இங்கே உழைக்க வருவார்கள். சீமான் பேச்சு அவருக்கு தண்டனை கொடுக்கும் அளவிற்கு இருக்கிறது.
சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் நமது தமிழர்கள் வாழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக ஏதாவது நடந்தால் நாம் சும்மா இருப்போமா? யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தான் நமது தமிழ் மரபு. எனவே தமிழக அரசு இதுபோன்ற வதந்தி கிளப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.