ஆஸ்கர் போட்டியில் நோபல் பரிசு பெற்ற மலாலா படம்

பாகிஸ்தானை சேர்ந்தவர் மலாலா. பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையில் பிறந்து, வளர்ந்த மலாலா அந்த பகுதியில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்ட்டபோது அதை எதிர்த்து பள்ளிக்கு சென்றார். பெண் கல்விக்கு ஆதராவாக பேசினார். இதன் காரணமா தாலிபான்களால் சுடப்பட்டார். பல விருதுகளைப் பெற்ற மலாலாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் இவரே. தற்போது அவர் லண்டனில் வசித்து வருகிறார்.

உலகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து பெண் விடுதலை, கல்விக்காக பேசி வருகிறார். பல உலக அமைப்புகளில் பங்காற்றி வருகிறார். கூடுதலாக மலாலா தற்போது ஒரு குறும்படம் ஒன்றை தயாரித்திருக்கிறார். பயங்கரவாதத்தை கைவிட்டு மனம் திருந்தி, இஸ்லாமியராக மாறிய முன்னாள் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரை பற்றியது இந்தப் படம்.

'ஸ்ட்ரேன்ஜர் அன் தி கேட்' என்கிற இந்த படத்தை ஜோசுவா செபல் என்பவர் இயக்கி உள்ளார். பிபி பர்ஹமி, சபீர் பர்ஹமி நடித்துள்ளனர். இதுவரை 6 சர்வதேச விருதுகளை வென்றுள்ள இந்த படம், தற்போது ஆஸ்கர் விருதிற்கு குறும்பட பிரிவில் போட்டியிடுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.