டெல்லி: இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்பம் இன்றுமுதல் (மார்ச் 6ந்தேதி) தொடங்குவதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மருத்துவப் படிப்பு மற்றும் மருத்துவத்துறை சார்ந்த துணை படிப்புகளுக்கு, நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயம். இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித் தனியே நீட் தேர்வு நடைபெறுகிறது. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு […]
