மதுரை: தென்மாவட்டங்களுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைகக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, அருங்காட்சியைகத்தை சுற்றி பார்த்தார். இதுகுறித்துடிவிட் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மூத்த இனமாம் நம் தமிழினத்தின் பெருமையை விளக்கும் கீழடி அருங்காட்சியகத்தைத் திறந்துவைத்தேன். கீழடியின் வயது 2600. தோண்டத் தோண்டப் புதையல்கள்! அனைத்தும் அருங்காட்சியகத்தில்! ஈராயிரம் ஆண்டு வரலாற்றின் சின்னம் கீழடி! அனைவரும் வந்து பாருங்கள். வரலாறு படிப்போம்! வரலாறு படைப்போம் என்றுபதிவிட்டுள்ளார்,. கீழடியில் சுமார் […]
