காந்திநகர்: போதை பொருளுடன் குஜராத் கடல்வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற ஈரான் நாட்டு மீன்படி கப்பலை கடலோர காவல்படையினர் நள்ளிரவில் தடுத்தி நிறுத்தினர்.
நேற்று குஜராத்தின் அரேபிய கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் வழக்கமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறிய மீன்பிடி படகு இந்திய கடல்பகுதிக்குள் அத்துமீறிநுழைவதை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
படகில் 5 பேர் இருந்தனர். படகில் 62 கிலோ போதை பொருள் இருந்தது தெரியவந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ. 425 கோடி என கூறப்படுகிறது. அதனை பறிமுதல் செய்த கடலோர காவல் படையினர் படகில் வந்த 5 பேர் கைதுசெய்யப்பட்டனர். விசாரணை நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement