கோலாலம்பூர், மலேஷியாவில் தொடர் கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவில் ஜோகூர், குளூவாங் உட்பட பல மாகாணங்களில் தொடர் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கானோர் வீடுகளையும், தங்கள் உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். மழை வெள்ளத்திற்கு இதுவரை நான்கு பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, வெள்ள நீரை அகற்றுவதுடன், தொற்றுநோய் பரவாமல் தடுக்க மருத்துவ முகாம்களும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காலநிலை மாற்றத்தால் சமீபகாலமாக முன்னெப்போதும் இல்லாத வகையில், அதிகளவு மழை பொழிவதாகவும், வளர்ச்சி என்ற பெயரில் நகரமயமாக்கல் ஆக்கப்பட்டதே இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணம் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement