உதவியாளர் கொண்டு காலணியை கழற்ற வைத்ததாக பிரபல பாலிவுட் நடிகை தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இவர் சர்ச்சையில் சிக்குவது அடிக்கடி நடப்பதுதான். அண்மையில் பாலிவுட் நட்சத்திர ஜோடிகளான சித்தார்த் மல்ஹோத்ரா – கியாரா அத்வானி ஆகிய இருவருக்கும் திருமணமும், அதைத் தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அதில் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை பூமி பட்னேகரும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய போது காரில் ஏறிய பூமி, ஒரு அடையாளம் தெரியாத நபருக்கு முத்தம் கொடுத்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த நபர் பிரபல தொழிலதிபரான யாஷ் கட்டாரியா என்பது தெரியவந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் இணையத்தில் பேசு பொருளாகியிருக்கிறார் நடிகை பூமி பட்னேகர்.
சமீபத்தில் பூமி பெட்னேகர் கலந்துக் கொண்ட விழாவில், குத்து விளக்கேற்ற அவரை மேடைக்கு அழைத்தனர். அப்போது அவர் காலணியை கழற்ற முயன்றார். ஆனால் கழற்ற முடியவில்லை. எனவே பூமி, தனது உதவியாளரை அழைத்து காலணியை கழற்ற வைத்தார்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்பளம் தருபவர் என்றால், செருப்பை எல்லாம் கழற்ற வைப்பீர்களா என்று நெட்டிசன்கள் நடிகை பூமி பெட்னேகரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
newstm.in