வடமாநிலத்தவர் சர்ச்சை; பொய் செய்தி பரப்பிய பீகார் நபர் கைது..போலீஸ் அதிரடி.!

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் கொல்லப்படுவதாக பொய் செய்தியை பரப்பிய பீகார் நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிறந்தநாள் விழா கடந்த மார்ச் 1ம் தேதி நடைபெற்றது. அதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலவ்ர் பரூக் அப்துல்லா, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாத்வ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்திய தேசிய அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்ட இந்த நிகழ்ச்சியில், வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. கடந்த முறை போல் அல்லாமல் வருகிற நாடாளுமன்ற தேர்தல் பாஜகவிற்கு சவாலாகவே இருக்கும் என கருதப்படுகிறது. அதற்காக மூன்றாவது முறையாக ஒன்றியத்தில் ஆட்சியமைக்க பாஜக பல முயற்சிகளை செய்யும் வேளையில், எதிர்கட்சிகள் ஓரணியில் இணைந்தால் அது பாஜகவிற்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என அக்கட்சி கருதுகிறது.

இந்த நிலையில் முக
ஸ்டாலின்
பிறந்தநாள் விழாவில் எதிர்கட்சிகள் ஒன்றிணைய முடிவு எடுக்கப்பட்டது, பாஜகவிற்கு கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. ஏனெனில் அதிக நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்ட ஒன்றியத்தில் ஆட்சி அமைப்பதற்கு அடிநாதமாக உத்தரபிரதேசத்தை பாஜக பெரிதும் நம்பி இருந்தது. அது போலவே இந்தி பேசும் மாநிலங்களையும் பாஜக நம்பி இருந்தது. இந்த சூழலில் உத்தரபிரதேசத்தில் தனிப் பெரும் எதிர்கட்சியாக உள்ள அகிலேஷ்யாத்வ் எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்தது பாஜகவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் தமிழ்நாட்டில் பணி புரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் கொல்லப்படுவதாகவும், தாக்கப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வைரலானது. இந்த விவகாரம் தேசிய அளவில் பேசு பொருளானது. ஆனால் இது வதந்தி என்பதை தெரிந்தும் பாஜக தலைவர்கள் அதை பகிர்ந்துள்ளனர். முக ஸ்டாலின் பிறந்தநாள் முடிந்த இரண்டு நாட்களில் இத்தகைய போலிச் செய்திகளை திட்டமிட்டு பாஜக பரப்பியதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இதன்மூலம் தமிழ்நாட்டை தேசிய அளவில் தனிமைப்படுத்தவும், வடமாநில வாக்காளர்களை கவரவும், எதிர்கட்சிகளின் கூட்டணியை களையவும் பாஜக திட்டமிட்டுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். அதைத் தொடர்ந்து போலிச் செய்திகளை பரப்பிய நபர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து வதந்திகளை பரப்பிய நபர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

24 மணி நேரம்.. முடிந்தால் கை வை.. அண்ணாமலை சவால்..! காவல்துறை ஷாக்!

இந்தநிலையில் தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோக்களை வெளியிட்டு வதந்திப் பரப்பியதற்காக, பிகார் மாநிலத்தின் ஜமூன் மாவட்டத்தைச் சேர்ந்த அமன்குமார் என்பவரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்தனர். போலி வீடியோக்களை நீக்க ட்விட்டர், பேஸ்புக், யூடியூப் நிறுவனங்களுக்கு பீகார் காவல்துறை கடிதம் எழுதியுள்ளது. மேலும் திட்டமிட்டு வதந்தி பரப்பப்பட்டுள்ளது என அம்மாநில காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதேபோல் பீகாரில் இருந்து தனிப்படை போலீசார் தமிழ்நாடு வருகை தந்துள்ளனர். ஹோலி பண்டிகைக்காக மட்டுமே தொழிலாளர்கள் ஊருக்கு செல்கிறார்கள்; அச்சப்படும் சூழல் எதுவும் இல்லை என பீகார் காவல்துறை கூடுதல் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.