'வட மாநிலத்தவர் மீது ஏன் திடீர் பாசம்'.. தீயாய் பரவும் சீமான் ஆடியோ..!

வட மாநில தொழிலாளர்கள் குறித்து எழுந்த பிரச்சினைகளுக்கு பிறகு நாம் தமிழர்

அதுகுறித்து பேசியுள்ளார். அந்த ஆடியோ வைரலாகி வருகிறது. அதில் சீமான் பேசியது; வட கிழக்கு மாநிலங்களில் இருப்பதை போல வட மாநிலங்களில் இருந்து வருகிற தொழிலாளர்களுக்கு உள்நுழைவு அனுமதி (inner line permit) வழங்க வேண்டும் என்று அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தமிழகத்துக்கு வேலைக்காக வருகிற தொழிலாளர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்? என்ன வேலைக்கு வருகிறார்? தங்கும் இடம், எவ்வளவு காலம் இங்கு தங்கியிருப்பார் என்ற பதிவுகள் அரசிடம் இருந்தால்தான் குற்ற செயல்கள் குறையும்..

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை அனைவருக்கும் தெரியும். இங்கு திருடிவிட்டு வெளி மாநிலத்துக்கு சென்றுவிட்டார்கள். அதில் ஒருவர் அரியானாவில் சிக்கியுள்ளார் மீதமுள்ளவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்..அவர்களை பிடிப்பது கடினமாக இருப்பதாக காவல்துறையே சொல்கிறது… ராமேஸ்வரம் பெண்ணை வட இந்தியர்கள் வன்கொடுமை செய்து கொலை செய்தார்கள்.. உணவகத்தில் வேலை செய்துகொண்டிருந்த வட இந்தியர்கள் ஓனரையே கொலை செய்துவிட்டு பணத்தை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளனர்…இப்படி பல செயல்கள் தொண்டர்ந்து நடந்து கொண்டிருக்கிறது..

நாம் அவர்களை தாக்கவில்லை அவர்கள்தான் நம்மை தாக்கியுள்ளனர்.. ஆனால், தமிழர்கள் வன்முறையாளர்கள் என்றும் தமிழர் தாக்குகிறார்கள் என்றும் தமிழர்கள் உழைக்க மாட்டார்கள், தமிழர்கள் சோம்பேறிகள் என்று அவமானப்படுத்துவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.. வட மாநிலத்தவர்கள் வருவதற்கு முன்பு இங்கு எந்த தொழிலும் நடக்கவில்லையா? அதை பற்றி பேசாமல் தமிழர்களை வன்முறையாளர்கள் என்றும் வட இந்தியர்கள் இல்லை என்றால் தமிழகத்தில் எதுவும் நடக்காது என்றும் பொய்களை பரப்பி வருகிறார்கள்… வட இந்தியர்கள் மீது ஏன் இந்த திடீர் பாசம்? ஆந்திர காட்டுப்பகுதியில் கூலிக்காக மரம் வெட்ட சென்ற தமிழர்களை சுட்டுக்கொலை செய்தார்களே! வெட்ட சொன்ன முதலாளியை விட்டுவிட்டு கூலிக்காக சென்றவர்களை ஏன் சுட்டுக்கொலை செய்தீர்கள் என்ற ஒரு பாவப்பட்ட வார்த்தைகூட வரவில்லை…

இந்திக்காரர்களை தமிழகத்துக்கு அனுப்பி பாஜகவுக்கு ஓட்டு போட செய்யலாம் என்று நினைப்பதை ஒருபோதும் திமுக அனுமதிக்காது என்று ஸ்டாலினே பேசியுள்ளார்.. அதே ஸ்டாலின், இப்போது வட இந்தியர்கள் மீது கை வைத்தால் எந்த கொம்பனாலும் அடக்குவோம் என்று சொல்கிறார்… எந்த மாதிரியான கோட்பாடு இது? நாங்கள் அர்த்தமில்லாமல் பேசவில்லை… வரலாறெங்கும் இதுதான் நடந்துள்ளது..

இலங்கையில்தான் இதுதான் நடந்தது… வந்து குடியேறியவன் எல்லாம் எங்களை அடித்து விரட்டுவான்… இங்கையும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது… ஆதிக்குடிகள் யார் என்பதிலே இங்கு பிரச்சினை நடக்கிறது… அப்போ பறையர், குறவர் எல்லாம் யார்? நாங்க ஆதிக்குடி இல்லையா? எனக்கான நீர் உரிமையா கேட்டால் சொந்த நாட்டிலேயே எங்களை அடித்து விரட்டுகிறார்கள் கர்நாடகாவில்…அப்போதெல்லாம் ஐயோ பாவம் என்று பேசாத நீங்கள்? தமிழர்கள் எங்கு அடிபட்டாலும் உங்களுக்கு நன்முறையா இருக்கு; மற்றவர்கள் என வரும்போது வன்முறையாக தெரியுது எப்படி?

என இவ்வாறு சீமான் அந்த ஆடியோவில் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.