வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பிரயாக்ராஜ்: என்கவுன்டர்கள் செய்வது அரசின் கொள்கை அல்ல, போலீசார் தங்களை தற்காத்து கொள்ளவே என உபி.யில் உமேஷ் பால் கொலை வழக்கில் சாட்சியை கொன்ற குற்றவாளிகள் இருவர் என்கவுன்டர் செய்யப்பட்டது குறித்து மாநில சட்டம்,ஒழுங்கு ஏ.டி.ஜி. கூறினார்.
உத்தர பிரதேசத்தில், பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.,வாக ராஜு பால் என்பவர், கடந்த 2005 ல் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையின் முக்கிய சாட்சியான உமேஷ்பால் கடந்த பிப்.26-ல் பிரயாக்ராஜ் நகரில் தன் சொகுசு காரில் வந்திறங்கிய உமேஷ் பால் என்பவரை, பின்புறமாக வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று தப்பியோடினர். இந்த சம்பவத்தில் பாதுகாப்புக்குவந்த இரு போலீசார் காயமடைந்தனர்.
![]() |
போலீசார் விசாரணை நடத்தியதில் ராஜூபால் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி பிபரல தாதாவும், முன்னாள் எம்.பி.,யுமான அதிக் அஹமது என்பதும். இவர் குஜராத் சிறையில் தற்போது தண்டனை அனுபவித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், இந்த கொலை வழக்கின் ”குற்றவாளிகளை பிடிக்க எட்டு தனிப்படை போலீசார் , கொலைாளிகளை தேடி வந்த நிலையில் கடந்த வாரம் அர்பாஸ் என்பவனையும், நேற்று உஸ்மான் என்பவனையும் போலீசார் என்கவுன்டர் செய்தனர். அடுத்தடுத்த என்கவுன்டர்களால் உ.பி.யில் அட்டூழியம் செய்யும் தாதக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து உபி. மாநிலம் சட்டம்,ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.பிரசாந்த் குமார் அளித்த பேட்டி, என்கவுன்டர்கள் செய்வது அரசின் நோக்கமோ, கொள்கையோ அல்ல. போலீசார் தங்களை தற்காத்து கொள்ளவே என்கவுன்டர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
அதிக் அஹமது மகன்கள் மாயம் தாயார் கோர்ட்டில் மனு
இதற்கிடையே சிறையில் உள்ள தாதா அதிக் அஹமதுவின் மனைவி சாட்ஷிதா பர்வீன், மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் தனது இரு மைனர் மகன்களும் காணாமல் போய்விட்டதாகவும் மீட்டுத்தருமாறும் கூறினார்.
இது குறித்து போலீசார் கூறுகையில், அதிக் அஹமது மகன்கள் காணாமல் போகவில்லை. அவர்கள் சிறுவர் கூர்நோக்கு பள்ளியில் உள்ளனர். கோர்ட் உத்தரவிட்டால் நேரில் ஆஜர்படுத்துவோம் என்றனர்.
எம்.பி. பகீர் தகவல்
மைனர்கள் மகள் காணாமல் போனது குறித்து சமாஜ்வாதி கட்சி எம்.பி ஒருவர் கூறுகையில், அவர்கள் இருவம் ஓரிரு நாளில் பிணமாக கண்டெடுக்கப்படுவார்கள். காரணம் இரு மகன்களையும் போலீசார் ஏற்கனவே என்கவுன்டர் செய்து இருக்கலாம் என பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement