சென்னை: மார்ச் 8 உலக மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பெண்ணடிமைத்தனம் அகற்றுவோம், பெண்ணுரிமை காப்போம் என முதலமைச்சர் வாழ்த்தியுள்ளார். உலகம் முழுவதும் உள்ள பெண்களை சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8-ந்தேதி ‘சர்வதேச மகளிர் தினம்’ கொண்டாடப்படுகிறது. பெண்களின் சாதனைகளை நிலைநிறுத்துவது, சவால்களை அங்கீகரிப்பது, பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தில் அதிக கவனம் செலுத்துவது போன்றவை இந்த நாளின் […]
