ஹலசூரு: திருடிய மொபைல் போனை திரும்ப தர, கல்லுாரி மாணவரிடம் ௧,௦௦௦ ரூபாய் பேரம் பேசிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தட்சிண கன்னடாவின் மூடபித்ரியைச் சேர்ந்தவர் ஷசாங், 20. பெங்களூரில் தனியார் கல்லுாரியில் படிக்கிறார்.
கடந்த 3ம் தேதி, மங்களூரில் இருந்து பெங்களூருக்கு ரயிலில் வந்தார். அவரது மொபைல் போன் திருடப்பட்டது.
அதிர்ச்சி அடைந்த அவர், பெங்களூரு ரயில்வே போலீசில் புகார் செய்தார். தன் மொபைல் போன் நம்பருக்கு, அடிக்கடி தொடர்பு கொண்டார்.
போனை எடுத்து பேசிய நபர், மொபைலை தான் திருடியதாகவும், திருப்பி கொடுக்க வேண்டும் என்றால், ௧,௦௦௦ ரூபாய் தர வேண்டும் எனவும், கூறினார்.
இத்தகவலை, ரயில்வே போலீசாரிடம் ஷசாங் தெரிவித்தார். நேற்று முன்தினம் அந்த நபர் கூறியதன்படி, ஷசாங் ஹலசூரு சென்றார். மொபைலை திருடிய நபரிடம் பணம் கொடுத்தார்.
அப்போது, மறைந்திருந்த போலீசார், அந்நபரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர், ஹலசூரை சேர்ந்த மனோஜ், 22 என்பதுதெரிந்தது. திருடப்பட்ட மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்