விஷ்ணு விஷால் -ராம்குமார் படத்தின் புதியஅப்டேட்!
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் கட்டா குஸ்தி. விமர்சன மற்றும் வசூல் ரீதியாக இப்படம் வெற்றி பெற்றது.
சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு இவர்கள் கூட்டனியில் முண்டாசுபட்டி ,ராட்சன் போன்ற நல்ல படங்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் காதல்,காமெடி கலந்த ஃபேண்டஸி கதைக்களத்தில் ஒரு படத்தை உருவாக்க உள்ளனர். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கின்றனர். இந்த படத்தின் படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளனர். இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா மோகன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மற்ற நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.