`உரிமை இருந்தும் முட்டை விலையை நிர்ணயிப்பதில் வியாபாரிகள் கையே மேலோங்கியுள்ளது' பண்ணையாளர்கள் வேதனை!

மேலும், இந்த கூட்டத்துக்குப் பின் பேசிய முட்டைக்கோழி பண்ணையாளர்கள்,

“என் முட்டை, என் விலை என்ற நோக்கத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு தோற்றுவிக்கப்பட்டது. இதன்மூலம், பண்ணையாளர்கள் கூட்டத்தில், முட்டைக்கான விலையை நிர்ணயிக்க வழி வகை செய்யப்பட்டது. ஆனால், தற்போது என்.இ.சி.சி அறிவிக்கும் விலையில் இருந்து எவ்வளவு குறைத்து வாங்க வேண்டும் என்று முட்டை வியாபாரிகள் முடிவு செய்கின்றனர். எனவே, முட்டை விலையை நிர்ணயிப்பது வியபாரிகள்தான். இதை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

முட்டை உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

இதற்கு என்.இ.சி.சி சார்பில், பண்ணையாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஏற்கனவே, என்.இ.சி.சி சார்பில் அறிவிக்கப்பட்ட விலைக்கு குறைவாக யாரும் முட்டையை விற்பனை செய்யக் கூடாது என முடிவு செய்யப்பட்டு, அந்த விலை, ஒரு ஆண்டு கடைபிடிக்கப்பட்டது. பின்னர், படிப்படியாக மைனஸ் விலை அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு பண்ணையாளர்களிடம் ஒற்றுமை இல்லாததே காரணம். இப்போதும், நெஸ்பேக் அறிவிக்கும் மைனஸ் விலைக்கும் அதிகமாக மைனஸ் விலையில், பண்ணையாளர்கள் யாரும் முட்டை விற்பனை செய்யாமல் ஒத்துழைத்தால், அடுத்து விரைவில் என்.இ.சி.சி விலைக்கே நாம் முட்டையை விற்பனை செய்ய முடியும்.

இதை அமல்படுத்த, 50 லட்சம் கோழிப்பண்ணைகளுக்கு ஒரு குழு என்ற முறையில், 16 குழுக்கள் அமைத்து முட்டைகளை விலை குறைத்து விற்பனை செய்யாமல் கண்காணிக்கப்படும். இதற்கு அனைத்து பண்ணையாளர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். அப்படி ஒத்துழைத்தால் மட்டுமே கோழிப் பண்ணைகளை நலிவடையாமல் காப்பாற்ற முடியும். மலேசிய நாட்டிற்கு முட்டை ஏற்றுமதி செய்வதற்கான உத்தரவினை விரைந்து பிறப்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கால்நடைத் துறை அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் அறிவுறுத்தி உள்ளார் என்று தெரிவித்தனர்.

நாமக்கல் மண்டலத்தில், 8 கோடி முட்டையினக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தவிர, தினசரி 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு தினசரி 50 லட்சம் முட்டைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. மாதம் ஒன்றுக்கு, 6 கோடி முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

முட்டை

தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும், கேரள மாநிலத்திற்கும் தினசரி முட்டைகள் விற்பனைக்காக லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்தியா முழுவதும் முட்டை உற்பத்தி அதிரித்துள்ளதால், முட்டை விலை வீழ்ச்சியடைய துவங்கியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு முட்டை விலை ரூ. 5.60-ல் இருந்தது. அந்த விலை படிப்படியாக சரிவடைந்து, தற்போது ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ. 4.40 ஆக உள்ளது. ஆனால், பண்ணைகளில் ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ. 4-க்கும் குறைவாக உள்ளது. கோழித்தீவன மூலப்பொருட்களின் விலை உயர்ந்து, ஒரு முட்டையின் உற்பத்தி செலவு ரூ. 4.50-க்கும் மேல் ஆகும் நிலையில், ரூ. 4-க்கும் குறைவாக ஒரு முட்டை விற்பனை விலை உள்ளது.

இதனால், கோழிப்பண்ணைத் தொழிலில் நாள்தோறும் ரூ. 3 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டு, பல பண்ணையாளர்கள் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் கோழிப்பண்ணைத் தொழில் நலிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், கோழிபண்ணை தொழிலில் ஈடுப்பட்டுள்ளவர்கள் புலம்புகின்றனர்.

நாமக்கல் கோழிப்பண்ணை

இந்நிலையில், கோழிப்பண்ணைத் தொழிலை நலிவடையாமல் காப்பாற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக, நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்.இ.சி.சி) சார்பில், பண்ணையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், என்.இ.சி.சி மண்டல தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார். மண்டல துணைத்தலைவர் சிங்கராஜ், தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தரராஜ், முட்டைக் கோழிப்பண்ணையாளர்கள் பெடரேசன் துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.