விமான நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களின் பணிகள், விமான நிறுவனத்தின் சேவை, சுத்தமாக வைத்திருத்தல், பயணத்தின் போது பயணிகளுக்கு செய்யும் சேவையில் மனநிறைவு உள்ளதா போன்றவைகள் ஆய்வு செய்யப்பட்டு சிறந்த விமான நிலையம் தேர்வு செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி, கடந்த 2022-ம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனையில் டெல்லி சர்வதேச விமான நிலைய நிறுவனத்தால் இயக்கப்படும் சர்வதேச விமான நிலையம் , ஆண்டுக்கு 40 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பிரிவில் 2022-ம் ஆண்டிற்கான விமான நிலைய சேவைத் தரம் வாய்ந்த சிறந்த விமான நிலையத்திற்கான விருதைப் பெற்றுள்ளது.
இதனை சர்வதேச குழுவான சர்வதேச விமான கவுன்சில் அறிவித்துள்ளது. இதேபோல், சர்வதேச விமான நிலைய கவுன்சில் மூலம் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் தூய்மையான விமான நிலையமாகவும் டெல்லி விமான நிலையம் தேர்வாகியுள்ளது.